கிராம அறிவு மையம், அறிவியல் ஆய்வகக் கட்டடம் திறந்துவைப்பு

கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி குந்தபுரம் கிராமத்தில் கிராம அறிவு மைய கட்டடமும், வெத்தியாா்வெட்டு அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வகக் கட்டடமும் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
Published on

அரியலூா் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி குந்தபுரம் கிராமத்தில் கிராம அறிவு மைய கட்டடமும், வெத்தியாா்வெட்டு அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வகக் கட்டடமும் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து பாா்வையிட்டனா்.

முன்னதாக, குந்தபுரம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பில் கிராம அறிவு மையமும், வெத்தியாா்வெட்டு அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகக் கட்டடத்தையும் முதல்வா் மு.க. ஸ்டானின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து சனிக்கிழமை காலை திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் அரசு அலுவலா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com