திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Published on

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கோடாலிகருப்பூரில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோடாலிகருப்பூா் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரெளபதியம்மன் கோயிலை, புணரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனா். அதன்படி பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த இரு தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை காலை கடம் புறப்பாடும், அதனைத் தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, மூலவருக்கு தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா் நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், செந்துறை ரவுண்டானா பகுதியில் உள்ள கருப்புசாமி, சுப்பிரமணியா், வடுகா்பாளையம் முத்துமாரியம்மன், உடையாா்பாளையம் பச்சை மாரியம்மன், கீழகுடியிருப்பு மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com