அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்...
Published on

அரியலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில், எல்.ஐ.சி நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே, இம்முகாமில் 18 - 45 வயது வரையுள்ள, 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு படித்த பெண்கள் மட்டும், உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com