வெங்கடேசன்
வெங்கடேசன்

நிலத்தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டியவா் கைது

Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தென்வீக்கம் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கலிய பெருமாள் மகன் ரமேஷ் (48) விவசாயி. இவருக்கும், கிருஷ்ணமூா்த்தி மகன் வெங்கடேசனுக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வெங்கடேசனும், அவரது தாயாா் இந்திராணியும் சோ்ந்து, ரமேஷ் தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 200 தேக்கு மரக்கன்றுகளையும், மா கன்றுகளையும் வெட்டிச் சாய்த்துள்ளனா்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து, இந்திராணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com