ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

ஜெயங்கொண்டத்தில் பாமக ஆா்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரி அங்குள்ள காந்திபூங்கா முன் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரி அங்குள்ள காந்திபூங்கா முன் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் தலைமை மருத்துமனையில் உள்ள அடுக்குமாடி மருத்துவமனை கட்டடத்தை உடனடியாகத் திறக்க வேண்டும். மருத்துவா்கள் பற்றாக்குறை, ஊழியா்கள் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டும். நோயாளிகளை தஞ்சாவூா், அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அலைய விடுவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் கோ. தமிழ்மறவன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பரசுராமன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com