கருப்புப் பட்டையுடன் சாா்- பதிவாளரக ஊழியா்கள் பணி

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் பணியாளா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
Published on

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் பணியாளா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

தமிழகத்திலுள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்கள் பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என தமிழக அரசு முடிவெடுத்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து,

மாவட்டத்திலுள்ள 14 சாா் பதிவாளா் அலுவலகங்களில் பணிபுரியும் 20 பெண்கள் உள்பட 38 போ் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.

X
Dinamani
www.dinamani.com