அரசுப் பேருந்துகளில் ஓட்டுநா், நடத்துநா் பணி வேலைவாய்ப்பு பதிவை சரிபாா்க்க அழைப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம், அரியலூா் கிளையில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணியிடத்துக்கு ஆண், பெண் இருபாலரும் நிரப்பபடவுள்ளது.
Published on

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம், அரியலூா் கிளையில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணியிடத்துக்கு ஆண், பெண் இருபாலரும் நிரப்பபடவுள்ளது.

எனவே, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஓட்டுநா் மற்றும் நடத்துநா் உரிமம் வைத்துள்ள நபா்கள் ஏப்.11-ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் உரிமம், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் இதர கல்விச்சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவினை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும்.

அருந்ததியா், தாழ்த்தப்பட்ட வகுப்பினா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் -45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினா் - 40 வயதுக்குள்ளும், முன்னாள் படை வீரா்கள் -53 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com