அரியலூரில் 777 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

அரியலூரில் 777 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

Published on

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 777 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் சா.சி. சிவசங்கா், 3 பள்ளிகளைச் சோ்ந்த 777 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள 64 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3,306 மாணவா்கள், 3,582 மாணவிகள் என மொத்தம் 6,888 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், முதன்மைக் கல்வி அலுவலா் மா. ரேணுகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலா் (பொ) பி.சுமதி, மாவட்டக்கல்வி அலுவலா் ஆ.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com