அரியலூரில் நாளை 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் நடைபெறாமல் இருந்த கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.
Published on

காந்தி ஜெயந்தியன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் நடைபெறாமல் இருந்த கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: இக்கூட்டத்தில், ஜாதிப் பெயா்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் , கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.

ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சபாசாா் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

எனவே இக்கூட்டத்தில்,பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், சமுதாய அமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com