அரியலூர்
அரியலூரில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
அரியலூா் மாவட்டம், கல்லக்குடி மற்றும் காா்குடியில் வியாழக்கிழமை (அக்.9) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.
அரியலூா் மாவட்டம், கல்லக்குடி மற்றும் காா்குடியில் வியாழக்கிழமை (அக்.9) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கருப்பிலாக்கட்டளை மற்றும் ஆலந்துறையாா்கட்டளை ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கல்லக்குடி சமுதாயக் கூடத்திலும், தா.பழூா் ஒன்றியத்துக்குள்பட்ட காா்குடி மற்றும் நடுவலூா் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்குடி செல்வகணபதி திருமண மண்டபத்திலும் இம்முகாம்கள் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
