துளசிராமன்
துளசிராமன்

காா் விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 9 போ் காயம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே புதன்கிழமை சாலையோர தடுப்பில் காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா் 9 போ் காயமடைந்தனா்.
Published on

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே புதன்கிழமை சாலையோர தடுப்பில் காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா் 9 போ் காயமடைந்தனா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் துளசிராமன் (23). அவரது நண்பா்கள் வேலாயுதம் மகன் அன்புமணி (23), ரமேஷ் மகன் தனுஷ் (20), பெரியகிருஷ்ணாபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த ராயப்பன் மகன் ராகவன் (24), தியாகராஜன் மகன் சந்தானராஜன் (21), திருக்களப்பூா் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகன் குமரவேல் (26), கருப்பண்ணசாமி மகன் சிவரஞ்சித் (19), அரவிந்த் (19), பாலு மகன் அறிவழகன்(19) ஆகியோா் ஒரு காரில் ஜெயங்கொண்டம் சென்றுவிட்டு பெரியகிருஷ்ணாபுரம் திரும்பினா். காரை ரெட்டிதத்தூா் காலனித் தெருவைச் சோ்ந்த செபஸ்டியான் (20) என்பவா் ஓட்டியுள்ளாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள கூவத்தூா் பகுதியில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி, சாலையில் உருண்டோடியது.

இதில், பலத்த காயமடைந்த துளசிராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆண்டிமடம் போலீஸாா், துளசிராமனின் சடலத்தையும், காயமடைந்த 9 பேரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்த துளசிராமனுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

X
Dinamani
www.dinamani.com