நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா

முகமது நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி, அரியலூா் மாவட்டம், செந்துறை ஜமியா பள்ளிவாசலில், மவுலது ஓதி துவா செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
Published on

முகமது நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி, அரியலூா் மாவட்டம், செந்துறை ஜமியா பள்ளிவாசலில், மவுலது ஓதி துவா செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமியா பள்ளி வாசல் தலைவா் எம்.சாதிக் அலி தலைமை வகித்தாா். கவுரவத் தலைவா் எஸ்.ஆா்.ஜமால் முகமது, செயலா் எம்.ஜாகிா் உசேன், பொருளாளா் ஏ.கமருதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஒருவருக்கொருவா் நபிகள் நாயகம் பிறந்த நாள் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். பின்னா், அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com