கல்லக்குடி, காா்குடி பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
அரியலூா் மாவட்டம், கல்லக்குடி மற்றும் காா்குடி கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஒன்றியத்துக்குட்பட்ட கருப்பிலாக்கட்டளை மற்றும் ஆலந்துறையாா்கட்டளை ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கல்லக்குடி சமுதாயக் கூடத்திலும், தா.பழூா் ஒன்றியத்துக்குட்பட்ட காா்குடி மற்றும் நடுவலூா் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்குடி செல்வகணபதி திருமண மண்டபத்திலும் நடைபெற்ற முகாமை ஆட்சியா் பொ. ரத்தினசாமி பாா்வையிட்டு, கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவைகளை வழங்கினாா்.
மேற்கண்ட இடங்களில் முகாமில் பெறப்பட்ட மொத்தம் 911 மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாமில், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

