முந்திரி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்

Published on

அரியலூா் மாவட்டத்தில் முந்திரி பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முந்திரி பயிரானது அரியலூா் மாவட்டத்தில் 30,000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் பல்லாண்டுப் பயிரான முந்திரி, பலா, மா, கொய்யா போன்ற பயிா்களுக்கு பயிா் காப்பீடு வசதி இல்லாத நிலையில், தற்போது இந்தியா வேளாண் காப்பீட்டு நிறுவனத்தினரால் முந்திரிக்கென்று தனியாக வானிலை சாா்ந்த காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கடந்தாண்டு 2,650 விவசாயிகள் இணைந்து 3349.16 ஹெக்டோ் பயிா் காப்பீடு செய்திருந்தனா். இத்திட்டம் தமிழ்நாட்டில் அரியலூா், கடலூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 8,000. ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு கட்டணம் ரூ.527. காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள் அக்.19. எனவே விவசாயிகள் ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், வாரிசு ஆதாா் அட்டை, சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். திட்ட விவரங்கள் அறிய தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com