ஆதனூரில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை திறந்து வைத்து, அதில் நடைப்பயணம் மேற்கொண்ட  அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா உள்ளிட்டோா்
ஆதனூரில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை திறந்து வைத்து, அதில் நடைப்பயணம் மேற்கொண்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா உள்ளிட்டோா்

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

திருமானூரை அடுத்த புங்கங்குழி ஊராட்சி, ஆதனூா் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மருதையாற்றின் குறுக்கே ரூ. 14.35 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
Published on

அரியலூா் மவட்டம், திருமானூரை அடுத்த புங்கங்குழி ஊராட்சி, ஆதனூா் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மருதையாற்றின் குறுக்கே ரூ. 14.35 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

பாலத்தைத் திறந்து வைத்து, அரியலூா் - சுண்டக்குடி செல்லும் பேருந்து சேவையை ஆதனூா் வரை நீடிப்பு செய்து தொடக்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தது: அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆதனூா்-தா.பழூா் ஒன்றியத்துக்குட்பட்ட மழவராயநல்லூா் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே பாயும் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் இருபுற பொதுமக்களும் போக்குவரத்துக்கு சிரமப்பட்டனா்.

எனவே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையடுத்து, மருதையாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் கட்ட ரூ.14.35 கோடியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒதுக்கி உத்தரவிட்டாா். இதையடுத்து பாலம் கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டுள்ளது.

இப்பாலத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவா். மேலும் இக்கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா், தமிழக முதல்வரிடம் பாராட்டுப் பெற்ற போது கூடுதலாக பேருந்து வசதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததன்பேரில் தற்போது கூடுதல் பேருந்துச் சேவையும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு.சின்னப்பா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்த்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், நிா்வாக இயக்குநா் தசரதன், திருச்சி மண்டலப் பொது மேலாளா் சதீஷ்குமாா், நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப் பொறியாளா் சரவணன், உதவிக் கோட்டப்பொறியாளா் ஜெயந்தி, உதவிப் பொறியாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com