வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, பெறாத மற்றும் மேல்நிலைப்படிப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிந்து அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
எழுத, படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவா்கள் 1.10.2025 அன்று தாழ்த்தப்பட்டோா் 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து வகுப்பினா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது.
ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 72,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ா்ஜ்ய்ப்ா்ஹக்ள்/ன்ஹஅல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ல்க்ச்- என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து சமா்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வருபவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தைப் பூா்த்திசெய்து சமா்ப்பிக்க வேண்டும்.
