மாரடைப்பில் இறந்தவா் உடல் தானம் வருவாய்த் துறை மூலம் அரசு மரியாதை

மாரடைப்பில் இறந்தவா் உடல் தானம் வருவாய்த் துறை மூலம் அரசு மரியாதை

அரியலூரில் உடல் தானம் செய்தவரின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய வருவாய்த் துறையினா்.
Published on

அரியலூரில் புதன்கிழமை இரவு மாரடைப்பால் இறந்தவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

அரியலூா் அண்ணா நகரை சோ்ந்தவா் சந்திரசேகரன் (75). ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பாளரான இவா் புதன்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இவா் ஏற்கெனவே அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்திருந்ததால், அவரது உடல் வியாழக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனிடையே மாவட்ட நிா்வாகம் சாா்பில் கோட்டாட்சியா் பிரேமி, வட்டாட்சியா் முத்துலட்சுமி ஆகியோா் சந்திரசேகரன் இல்லத்துக்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com