தாட்கோ மூலம் ஒப்பனை மற்றும் அழகுக்கலை, பச்சைக் குத்துதல் பயிற்சி பெற விரும்பும் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகளை வழங்கவுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோா் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்ளாகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான காலஅளவு 90 நாள்கள். திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனம் தோ்வு செய்து அந்நிறுவனத்தின் மூலம் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும்,
இப்பயிற்சியில் சேருவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், அறை எண்.225, 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற விலாசத்திலும், 04329-228315 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம்.