இருசக்கர வாகனத்தில் சாகசம் 8 இளைஞா்கள் மீது வழக்கு

Updated on

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் 8 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா்.

ஆண்டிமடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சாலையில் தலைக்கவசம் அணியாமலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், வீலிங் செய்தும் சில இளைஞா்கள் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனா்.

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் உதவி ஆய்வாளா் நந்தகுமாா் விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, சாகசத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சோ்ந்த 8 இளைஞா்கள் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்த காவல் துறையினா் சாகசத்துக்குப் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com