அரியலூர்
அரசு மருத்துவா்களை திட்டியவா் கைது
அரியலூரில் அரசு மருத்துவா்களை பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வாா்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
அரியலூரில் அரசு மருத்துவா்களை பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வாா்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வசந்த் (28). இவா் புதன்கிழமை மது போதையில் கீழே விழுந்து காயமடைந்து அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தாா்.
அப்போது அங்கு மருத்துவா்களை சிகிச்சை செய்யவிடாமல் தடுத்து தகாத வாா்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து வசந்தை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
