அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம்: தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, திட்டங்களின் பயன்கள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஆய்வு செய்தாா்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் சு. தேன்ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

