கரூரில் மாநில அளவிலான சீனியர் ரேங்கிங் இறகுப்பந்து போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
போட்டிகளை கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் கே. வெங்கட்ராமன் தொடக்கி வைத்து பேசினார். கரூர் மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பில் நடைபெறும் இப்போட்டி ஜூன் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கிறார்கள். போட்டிகள் தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற உள்ளது. தனிநபர் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 12,000-ம், 2-ம் பரிசாக ரூ. 9,000-ம், இரட்டையர் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 18,000-ம், 2-ம் பரிசாக ரூ. 12,000-ம் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல்பரிசாக ரூ. 10,000-ம், 2-ம் பரிசாக ரூ. 7,000-ம், இரட்டையர் பிரிவில் முதல் பரிசாக ரூ. 12,000-ம், 2-ம் பரிசாக ரூ. 7,000-ம், கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் பரிசாக ரூ. 12,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 7,000-ம் என மொத்தம் ரூ. 1.60 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முன்னதாக ஆதர்ஷ் வி. தர்மராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் விசா ம. சண்முகம் வரவேற்றார். இதில் கரூர் வைஸ்யா வங்கியின் முதன்மை பொது மேலாளர் கே.வி. ராவ், உதவி மேலாளர் வெங்கடேசன், மாவட்ட இறகுப்பந்து கழகச் செயலர் என். அருண், பொருளாளர் பி. ராஜசேகர், கரூர் ஜூபிளி லிட்ரேசி அசோசியேசன் செயலர் விசா. ம. குணசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.