கரூர், செப். 23: கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தலைமை தபால்நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஐநா சபையில் போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபட்சவை பேச அனுமதிக்கக் கூடாது, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் பரமத்தி ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.