Enable Javscript for better performance
திமுக வேட்பாளர் மீது இந்து முன்னணி புகார்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் விதிகளை மீறி செயல்பட்ட திமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி நகரச் செயலர் வி. ரமேஷ்குமார் தலைமையில் அந்த அமைப்பினர் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ச. ஜெயந்தியிடம் புதன்கிழமை மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பது:

    கரூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரான ம. சின்னசாமி, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுகையில், திமுக காதர்மொய்தீன் என்ற என்னையும் சேர்த்து 5 தொகுதிகளை இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கியுள்ளது என்றார். இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

    தேர்தல் விதிமுறையில், ஜாதி, இனம், மதம் போன்ற உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்து மதத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் ம. சின்னசாமி தன்னை இஸ்லாமியர் என்றும், தன் பெயர் காதர்மொய்தீன் என்றும் பேசி இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai