Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தலில் பணத்துக்கு வேலையில்லை: பெரம்பலூர் காங்கிரஸ் வேட்பாளர் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் பணத்துக்கு வேலையில்லை: பெரம்பலூர் காங்கிரஸ் வேட்பாளர் பேச்சு

    Published on : 27th March 2014 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் பணத்துக்கு வேலையில்லை என்றார் பெரம்பலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம். ராஜசேகரன்.

    குளித்தலையில் புதன்கிழமை நடைபெற்ற குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த காரணத்தால் மட்டுமே திமுக வேட்பாளர் நெப்போலின் வெற்றிபெற்று மத்திய அமைச்சரானார். அதன்பிறகு அவர் இந்தத் தொகுதிக்குள் வரவில்லை, தொகுதி மக்களுக்கும் எவ்வித திட்டப் பணிகளையும் செய்துதரவில்லை. எனவே, இனி திமுக தேர்வதற்கு வழியே இல்லை. அதேபோல, அதிமுகவுக்கும் வாய்ப்பு இல்லை. இந்திய பிரதமராக வரப்போவது காங்கிரஸ் அல்லது பாஜக கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பர். மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை. தேமுதிக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும், எனினும், விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்துவிட்டார். இந்திய ஜனநாயக கட்சியை பொருத்தவரை அதிக பணம் இருந்தாலும், பணத்துக்கு இத்தேர்தலில் வேலையில்லை. நான்கு கட்சிகள் போட்டியிடும் இந்தத் தொகுதியில், வெற்றி பெறப்போவது காங்கிரஸ் மட்டுமே.

    எனவே, காங்கிரஸ் அரசு மூலம் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் வழங்கி ஓட்டு சேகரிக்க வேண்டும் என்றார் அவர்.

    முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் கே. பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். கூட்டத்துக்கு, கரூர் மாவட்டத் தலைவர் பேங்க் கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் பி. அசோக்குமார், கோபால், குளித்தலை நகரத் தலைவர் கே.எஸ்.எம். சர்புதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai