Enable Javscript for better performance
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    உண்டு உறைவிடப்பள்ளி நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

    By கரூர்  |   Published on : 17th April 2015 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உண்டு உறைவிடப்பள்ளியை நடத்த தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கரூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளியில் இடைநின்ற மற்றும் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளியை நடத்துவதற்கான விருப்பமுள்ள அங்கீகாரம் பெற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்கம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 48-ல் ஏப். 20 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 29 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai