Enable Javscript for better performance
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை: அரவக்குறிச்சியில் 81 மி.மீ., மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை: அரவக்குறிச்சியில் 81 மி.மீ., மழை பதிவு

    By கரூர்  |   Published on : 17th April 2015 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 81 மி.மீ., மழை பதிவானது. தமிழகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறாக கோடை வெப்பம் பிப்ரவரி மாதத்திலே அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால் கோடை வெப்பம் தணிந்துள்ளது. புதன்கிழமை இரவு ஒரு மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை நள்ளிரவில் பெய்த மழையின் அளவு (மி. மீட்டரில்): அரவக்குறிச்சி- 81, க. பரமத்தி- 18, குளித்தலை-1.30, மாயனூர்- 5.40, கரூர்- 48, அணைப்பாளையம்- 59.20, தோகைமலை- 5.30, பஞ்சப்பட்டி-22, பாலவிடுதி- 72.20, கடவூர்- 40.60, கிருஷ்ணராயபுரம்- 6, மைலம்பட்டி- 45.20 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 405 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai