Enable Javscript for better performance
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை - Dinamani

சுடச்சுட

    

    முன்னூர் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், முன்னூர் ஊராட்சி மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் ஜெயரூபிஜெயராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரசாத், ஊராட்சிச் செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வார்டு உறுப்பினர்கள் பேசுகையில், ஊராட்சி பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் காவிரிக் கூட்டு குடிநீர் குறைந்தளவில் விநியோகம் செய்யப்படுவதால் ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வடிகால் வாரியம் குடிநீருக்கான வரித்தொகையை மட்டும் முறையாக வசூலிக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்து ஊராட்சித் தலைவர் ஜெயரூபி பேசுகையில், ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்து குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், நிர்வாக பொறியாளர் ஆகியோரிடம் பல முறை நேரிலும், தபால் மூலமாகவும் தெரிவித்தும், மனு அளித்தும் இதுவரை எவ்வித பலனும் இல்லை. இனியாவது காவிரி குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக காவிரி குடிநீர் வாரிய அதிகாரிகளை மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, சிறு கனிம நிதி மூலம் மேளபாளையத்தில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவது, வேலம்பாளையம் மற்றும் சாமிநாதபுரத்தில் தார்ச்சாலை அமைப்பது, முன்னூர் அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai