Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் சத்துணவு ஊழியர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கரூர் மாவட்டத்திலும் 778 சத்துணவு மையங்களில் பணிபுரியும் 1,846 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்க அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் சங்கத் தலைவர் ஏ. வேம்புசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பழனியம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் மு. சுப்பிரமணியன், மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாநில துணைத் தலைவர் ஏ. பெரியசாமி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சத்துணவு மையங்களிலும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai