Enable Javscript for better performance
நரிக்குறவர்களுக்கு ரூ.5.30 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    நரிக்குறவர்களுக்கு ரூ.5.30 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

    By கரூர்,  |   Published on : 17th April 2015 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரிக்குறவர்களுக்கு ரூ. 5.30 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

    கரூர் அரசு காலனி, மணவாசி பகுதியில் நரிக்குறவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கரூர் மாவட்டத்தில் 170 நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக வீட்டுமனை பட்டாவுடன் விலையில்லா பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 29 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேருக்கு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நரிக்குறவர் நலவாரியம் மூலம் 149 பேருக்கு நலவாரிய அட்டையும், 60 பயனாளிகளுக்கு சிறுதொழில் தொடங்க, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை என மொத்தம் ரூ. 5.30 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விபத்து காப்பீட்டுத் திட்டம், விபத்து நிவாரணம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நரிக்குறவர்களின் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், நேரடியாக நகர் பகுதிகளுக்கு கள ஆய்வு மேற்கொண்டதின் பேரில் ஏராளமான குழந்தைகள் விடுதியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். அரசு திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பெற்று பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து பயனாளி கரூர் அரசு காலனியைச் சேர்ந்த கஜேந்திரன் கூறுகையில், ஊர், ஊராகச் சென்று பாசி, மணிகள் விற்று வந்தோம். இப்போது ஒரே இடத்தில் நிரந்தரமாக இருந்து தொழில் செய்ய அரசு கடை வைத்துக்கொடுத்துள்ளது. தமிழக அரசுக்கு நன்றி என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai