Enable Javscript for better performance
போக்குவரத்துத் துறை அமைச்சர் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் அதிமுக மாவட்டச் செயலர் பதவிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கரூர் மாவட்ட அதிமுக கிளை, நகர, ஒன்றிய பதவிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை தொடங்கிய முதல் நாளில் மாவட்ட அவைத் தலைவர், பொருளாளர், மாவட்ட துணைச் செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு தற்போதைய பொறுப்பில் உள்ளவர்கள் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற மனு தாக்கலில் மாவட்டச் செயலரும், போக்குவரத்து துறை அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி மாவட்டச் செயலர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இதே பதவிக்கு முன்னாள் எம்எல்ஏ கு. வடிவேலு, முன்னாள் மாவட்டச் செயலர் சாகுல்அமீது உள்ளிட்ட 4 பேரும், பொருளாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலர் பதவிக்கு கரூர் தொகுதிச் செயலர் எஸ். திருவிகா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர்கள் எம்பிக்கள் மரகதம் குமரவேல்(காஞ்சிபுரம்), கே.என். ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்), எம்எல்ஏக்கள் மனோகரன் (திருப்போரூர்), வி.எஸ். ராஜூ(செய்யூர்), முனுசாமி, சோலை இரா. கண்ணன், பாப்பாசுந்தரம், வழக்குரைஞர் கனகராஜ், மாவட்ட துணைச் செயலர் ஏ.ஆர். காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai