Enable Javscript for better performance
மனு அளித்தவர்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மனு அளித்தவர்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தல்

    By கரூர்  |   Published on : 17th April 2015 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஜமாபந்தியில் வீட்டுமனைக் கோரியும், பஞ்சமி நிலத்தை மீட்டுத்தரக் கோரியும் மனு அளித்தவர்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாவும், நிலமும் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்ட தலீத் மக்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாளையொட்டி நில உரிமை மீட்பு கருத்தரங்கு குளித்தலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நில உரிமை கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் சாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ், தென்னிந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, சிவகங்கை தெரசா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2014 ஜமாபந்தியில் 1,463 பேர் வீட்டுமனைக் கோரியும், 112 பேர் பஞ்சமி நிலத்தை மீட்டுத்தரக் கோரியும் மனு செய்தவர்களுக்கு, உடனடியாக வீட்டுமனைப் பட்டாவும், நிலமும் வழங்க வேண்டும். ஆந்திராவில் 20 தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற, ஆந்திர காவல் துறையினரைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai