Enable Javscript for better performance
தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    கரூர் அருகே ரூ. 30 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை அரவக்குறிச்சி எம்எல்ஏ கேசி. பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

    கரூர் அருகேயுள்ள ராஜபுரம் ஊராட்சி நம்பகவுண்டனூரில் திருச்சி சிவா எம்பி நிதி ரூ. 30 லட்சத்தில் அரவக்குறிச்சி - சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் சீரங்கனூர் பிரிவு முதல் நம்பகவுண்டனூர் வரை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை புதுப்பிக்கப்பட உள்ளது.

    இதற்கான பூமிபூஜைக்கு திமுக ஒன்றியச் செயலர் கே. கருணாநிதி தலைமை வகித்தார்.

    ராஜபுரம் ஊராட்சி செயலர் தண்டபாணி வரவேற்றார்.

    ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பூமிபூஜையை எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமி தொடங்கி வைத்துப் பேசினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்ரமணி, துணைச் செயலர்கள் கருணாகரன், நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai