Enable Javscript for better performance
ரயில் மறியலுக்கு முயற்சி: 9 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் திங்கள்கிழமை ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினர் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 1993-க்கு பிறகு விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், மனித மலத்தை கையால் அள்ளும் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும், தூய்மைப் பணியில் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வியக்கத்தினர் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கரூர் ரயில் நிலையம் முன் கூடினர்.

    பின்னர் மாவட்டத் தலைவர் பாரதிராசன், செயலர் வை. சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    பின்னர் கரூர் ரயில் நிலையத்திற்கு 11.30-க்கு வந்த கோவையில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் பயணிகள் ரயிலை மறிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த நகர காவல் நிலையத்தினர் அவர்களைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai