Enable Javscript for better performance
\\\"அறிவுடன், ஆற்றலையும் பெருக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    குளித்தலை, ஜன. 27:  பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் அறிவுடன் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்.

    கரூர் மாவட்டம், குளித்தலையில் திங்கள்கிழமை நடைபெற்ற, பாரதி வித்யாலயா உயர்நிலைப்பள்ளியின் 31-வது ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா மற்றும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் மேலும் பேசியது:

    இன்று மதுபானக் கடைகளை ஒரு இடத்தின் அடையாளத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு நமது கலாசாரம் தேய்ந்துவிட்டது.

    பண்பாட்டு  சீரழிவுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதியவர்களே காரணம். பள்ளிக் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பகுத்தறிவு, விஞ்ஞான ரீதியாக அவர்கள் ஏற்றுக் கொள்கிற வகையில் நாம் எடுத்துக் கூறினால்தான், அவர்கள் பண்பாடு நிறைந்தவர்களாக மாறுவார்கள்.

    பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் நிறைய சம்பாதிக்க ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதே தவிர, ஒழுக்கமாக, நல்ல குடிமகனாக அவன் திகழ வேண்டும் என்கிற எண்ணமில்லை. மாணவர்கள் தங்கள் அறிவை மட்டும் பெருக்கிக் கொள்ளாமல் தங்கள் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில் இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற, பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.  

    விழாவுக்கு, குளித்தலை அமலராக்கினி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியைர் பி.டெரன்ஸ் தலைமை வகித்தார்.

    முன்னதாக திங்கள்கிழமை காலை நடைபெற்ற நிகழச்சியில், பாரதீய கிசான் சங்க அமைப்பாளர் ஏ.வி. கோபாலதேசிகன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai