Enable Javscript for better performance
இலவச சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கரூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் ஆலையில் நடைபெற்றது.

    செட்டிநாடு சிமென்ட் ஆலை மற்றும் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற, முகாமுக்கு ஆலையின் முதுநிலை துணைத் தலைவர் ஏ. அண்ணாதுரை தலைமை வகித்து தொடக்கிவைத்தார்.

    ஆலையின் முதுநிலை பொது மேலாளர் ஜி.ஏ. சீனிவாசன் (பொறியியல்), பொதுமேலாளர் (கணக்கு) கே. காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் ஆலைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இருதயம், நரம்பு சிகிச்சை, எலும்பு மூட்டு உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai