Enable Javscript for better performance
குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நேர்காணல் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நேர்காணல் முகாம்

    By கரூர்  |   Published on : 28th January 2015 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூர், ஜன. 27: கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நிகழாண்டில் இதுவரை நடைபெற்ற நேர்காணல் முகாமில் 576 பேர் தேர்வு பெற்றுள்ளதாக கல்லூரியின் செயலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கல்வித் திறன், தொழில்நுட்ப அறிவு, தனித்திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கரூர் எம். குமாரசாமி கல்லூரி சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்கி வருகிறது.

    இதற்காக கருத்தரங்குகள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, மாணவர்களின் தகுதி, திறமையை அடையாளம் கண்ட சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்கள் குமாரசாமி கல்லூரி மாணவர்களை பணியமர்த்த வளாக நேர்காணல் நடத்தின. கடந்த நான்கு மாதங்களாக அடுத்தடுத்து கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 80 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

    நிகழாண்டில் மட்டும் டிசிஎல்சில் 165 பேர், விப்ரோ 47, சிடிஎஸ் 26, அக்சஞ்சர் 23, ரானே 3, ஐபிஎம் 5, ஹேக்ஸ்வர் 7, இட்பி 17, எல்அண்டி 2, மேவரிக் 4, கேஜிஐஎஸ்எல் 3, ஹிந்துஜாக்ளோபல் சொல்யூசன்ஸ் 90, இன்துஸ் இன்டஸ்ட்பேங்க் 8, வீடெக்னாலஜிஸ் 22, மைனட்பிரி 1 ம்ற்றும் இதர நிறுவனங்கள் 153 என மொத்தம் 576 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி பணியில் அமர்த்தி தமிழகத்தில் இரண்டாம் தலைநகரங்களில் அதிக வேலைவாய்ப்பை பெற்றுத்தந்த கல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai