Enable Javscript for better performance
\\\"குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    கரூர், ஜன. 27: குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி.

    கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கல்லூரி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடக்கிவைத்து அவர் பேசியது:

    மாணவ சமுதாயம் கல்வி கற்கும் நேரத்தில் கவனத்தை திசை திருப்பாமல் ஒரு திட்டத்தை வடிவமைத்து செயல்படும்போது முழு வெற்றியும் கிடைத்து விடுகிறது. இதன்மூலம் தொழில்துறையை தேர்வு செய்வதற்கு அது வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

    படிப்பை முடித்தவுடன் தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப பணியையோ அல்லது தொழில்துறையையோ தேர்வு செய்யும்போது அதற்குரிய பயன் மிக எளிதில் கிடைக்கும். மேலும் தொழில்துறையை உருவாக்க திட்டமிடும்போது அதற்குரிய பயிற்சிகள் மற்றும் வழிகாட்டிகள் என எண்ணற்ற திட்டங்கள் அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே மாணவ, மாணவிகள் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்று, குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றார். முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அமைக்கப்பட்ட தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை அவர் தொடக்கிவைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் கரூர் கோட்டாட்சியர் (பொ) மல்லிகா, வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் மணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai