Enable Javscript for better performance
குளித்தலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குளித்தலை, ஜன. 27: குளித்தலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இச்சங்கத்தின் குளித்தலை ஒன்றியச் செயலர் டி. இளங்கோவன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில், முறையாக வழங்கி வந்த முதியோர் ஓய்வூதியத்தை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. எனவே, அதை மீண்டும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். இதில் வேலை கோரும் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா, குடிமனை பட்டாவுக்காக மனுகொடுத்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ராஜூ, கே. சக்திவேல், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பி. சங்கரநாராயணன், செயலர் பி. பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai