Enable Javscript for better performance
தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கரூர், ஜன. 27: கரூரில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மனிதநேய வார விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பேரணியை தொடக்கிவைத்தார்.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே. ஜோஷிநிர்மல்குமார் முன்னிலை வகித்தார்.

    பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தும், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறுச் சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தை அடைந்தது.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செல்வம், துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகராஜன், வட்டாட்சியர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai