கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கணிதப் பயன்பாடு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் ஆலோசகர் துரைராஜ், கல்லூரி முதல்வர் கவிதா, அறிவியல் மற்றும் மானுடவியல் துறையின் கல்வித் தலைவர் பேராசிரியர் ரமேஷ், இயந்திரவியல் மற்றும் கட்டுமானவியல் துறை தலைவர் கார்த்திகேயன், முதலாம் ஆண்டு துறைத் தலைவர் பேராசிரியர் சித்திரகலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சேலம் சோனா தொழில் நுட்பக்கல்லூரியின் மொழி மற்றும் மானுடவியல் துறையின் தலைவர் ரேணுகா, சேலம் அரசு தொழில்நுட்பக்கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் சித்திரலட்சுமி, கோவை பாரதியார் பல்கலைக்கழக கணிதத் துறையின் முன்னாள் துறைத் தலைவர் அஞ்சலிதேவி மற்றும் திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் கணித துறைத் தலைவர் ஜானகிராமன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் திலகவதி, கார்த்திகா, விழாக்குழுவினர்கள் செய்தனர்.