டிஎன்பிஎல் ஆலை சார்பில் மாணவர் திறன்சார் போட்டிகள் தொடக்கம்

டிஎன்பிஎல் ஆலை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை உள்ளிட்ட திறன்சார் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

டிஎன்பிஎல் ஆலை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை உள்ளிட்ட திறன்சார் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

ஆலை குடியிருப்பு வளாகத்தில் ஆலையின் முதன்மை விழிப்புணர்வு அதிகாரி சந்திரசேகர், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், சிவகாமி வெள்ளியங்கிரி,

முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி)சுப்ரமணியன் அவர்களும், பொது மேலாளர் (மனித வளம்)பட்டாபிராமன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.

போட்டிகளில் ஈரோடு,கரூர்,திருச்சி,நாமக்கல்,திண்டுக்கல், கோவை,திருப்பூர்,சேலம் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து 21 அரசுப் பள்ளிகள் உட்பட 80 பள்ளிகளிலிருந்து 1,789 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி,திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியத்தில் வினாடி-வினா போட்டி,தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,தமிழ் பழமொழிகள்,வார்த்தை விளையாட்டு, குழு கலந்துரையாடல்,பொது அறிவுப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ,மாணவிகளுக்கு பரிசாக வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com