Enable Javscript for better performance
கரூரில் ரயில் முன் பாய்ந்து ஆயுதப்படை காவலர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் ரயில் முன் பாய்ந்து ஆயுதப்படை காவலர் தற்கொலை

    By கரூர்  |   Published on : 21st May 2016 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் ரயில் முன் பாய்ந்து ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

    கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் லோகநாதன் (27). திருமணமாகாதவர். இவர் கரூர் ஆயுதப்படை போலீஸில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது தலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறு கட்டி உருவானது. அது நாளடைவில் வளர்ந்து பெரிதாகியுள்ளது.

    இதையடுத்து லோகநாதன் மருத்துவரை அணுகியபோது, கட்டியை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த அவர் வெள்ளிக்கிழமை கரூர் காந்திகிராமம் ரயில்வே பாலத்தின் கீழ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து கரூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai