Enable Javscript for better performance
கரூரில் அரசு ஊழியர்கள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு ஊழியர்கள் சனிக்கிழமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர்.
    கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. லைட் ஹவுஸ் கார்னரில் தொடங்கிய பேரணியை அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் து. சாமுவேல் சுந்தரபாண்டியன் தொடக்கி வைத்தார்.
    பேரணி திண்டுக்கல் சாலை, ஜவஹர் பஜார், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக வந்து பொதுக்கூட்டம் நடைபெறும் சங்க அலுவலகம் முன் நிறைவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற
    பொதுக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ச.இ.கண்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம். பாலசுப்ரமணியன் உள்ளிட்ட சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர். பொருளாளர் பொன்.ஜெயராம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai