Enable Javscript for better performance
பிடல் காஸ்ட்ரோ மறைவு : கம்யூ. கட்சியினர்  மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    பொதுவுடைமை போராளியும்,கியூபாவின் புரட்சியளாரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    கட்சியின் மூத்தத் தலைவர் ஜி. ரத்தினவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில கட்சியின் மாவட்டச் செயலாளர் கா.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஜீவானந்தம்,என். ராஜீ, நகர செயலாளர் எம். ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். வேலுசாமி, எஸ்.பி. ஜீவானந்தம் மற்றும் சிஐடியு சங்க மாவட்ட நிர்வாகிகள் தனபால், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai