Enable Javscript for better performance
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு  முகாம்கள் நடத்தி உடனடித் தீர்வு: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்களின் பிரச்னைகளுக்கு  முகாம்கள் நடத்தி உடனடித் தீர்வு: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    By DIN  |   Published on : 28th November 2016 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவில், ஊராட்சி ஒன்றிய அளவில் பல்வேறு முகாம்கள் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
    கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராஜேந்திரம்,பொய்யாமணி,இனுங்கூர் ஆகிய பகுதிகளில் 850-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர் மேலும் பேசியது: முதல்வரின் உத்தரவின் படி, ஊராட்சி வாரியாக பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் தான் மக்கள் குறைதீர்க் கூட்டம், அம்மா திட்ட முகாம் மற்றும் மக்கள்-தொடர்பு முகாம் ஆகியவை மூலம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம்,அம்மா குழந்தைகள்நல பரிசுப் பெட்டகம் ஆகியவற்றை வழங்கி வருகிறார் என்றார்.  
    நிகழ்ச்சியில் 19 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையினையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சக்திவேல், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர். காளியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai