Enable Javscript for better performance
அக். 12-ல் மணல் குவாரி முற்றுகை : காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அக். 12-ல் மணல் குவாரி முற்றுகை : காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் 12 ஆம் தேதி நஞ்சைகடம்பங்குறிச்சியில் செயல்படும் மணல்குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    இதுதொடர்பாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்ததாவது:
    கரூர் மாவட்டம், நஞ்சைகடம்பங்குறிச்சியில் கடந்த ஆண்டு டிச.9 ஆம் தேதி மணல் குவாரிக்கு அரசு அனுமதி வழங்கியது. அப்பகுதியில் மணல் குவாரி செயல்படத் தொடங்கியது முதல் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக கிழக்கு தவிட்டுப்பாளையத்தில் 15-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 3 கி.மீ. நீளம், 2 கி.மீ. அகலம் மற்றும் 15 அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்படுகிறது. மேலும், மணல் குவாரியில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆட்சியரை ஆக.3 மற்றும் செப்.21 ஆகிய தேதிகளில் சந்தித்து புகார் அளித்தோம். மேலும் இதுதொடர்பாக அண்மையில் வேலாயுதம்பாளையத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்று மணல் குவாரியை மூட வலியுறுத்தினர். இந்நிலையில் குவாரி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வெள்ளிக்கிழமை (அக். 7) ஆட்சியரை மீண்டும் சந்தித்து புகார் மனு அளிக்க வந்தோம். ஆனால் ஆட்சியர் இல்லாததால் அவரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துள்ளோம். இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுவதைக் தடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் வரும் 12 ஆம் தேதி மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai