Enable Javscript for better performance
கரூரில் பொரி உற்பத்தி தீவிரம்: விலை இரு மடங்கு உயர வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் பொரி உற்பத்தி தீவிரம்: விலை இரு மடங்கு உயர வாய்ப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொரி உற்பத்திக்கு கர்நாடகத்தில் இருந்து வரவழைக்கப்படும் நெல் பற்றாக்குறையால், கரூரில் பொரியின் விலை இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.
    தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஆயுத பூஜையும் ஒன்று. இதில், தங்களின் தொழில் சார் கருவிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி வகைகள் இருந்தாலும் முக்கிய இடத்தில் இருப்பது பொரி. ஆயுத பூஜையை முன்னிட்டு,கரூரில் பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொரி உற்பத்திக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்படும் 64 ரக நெல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. காவிரி பிரச்னை காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கையிருப்பைக் கொண்டு பொரி உற்பத்தி செய்து வந்தோம். நெல் பற்றாக்குறையால் கடந்த ஆண்டு ரூ.300 முதல் 350 வரை விற்கப்பட்ட பொரி மூட்டை, நிகழாண்டில் ரூ.600 வரை விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர் பொரி உற்பத்தியாளர்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai