Enable Javscript for better performance
கல்வி சுற்றுலாவாக ஆட்சியரகம் வந்த ஆண்டாங்கோயில்புதூர் பள்ளி மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கல்வி சுற்றுலாவாக ஆட்சியரகம் வந்த ஆண்டாங்கோயில்புதூர் பள்ளி மாணவர்கள்

    By DIN  |   Published on : 08th October 2016 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி சுற்றுலாவாக, கரூர் ஆண்டாங்கோயில்புதூர் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகள் 53 பேர் ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களை வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
    கரூர் ஆண்டாங்கோயில்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 53 மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் கல்விச் சுற்றுலாவாக பள்ளி தலைமை ஆசிரியை த. கண்மணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு அரசு அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் அரசின் இ - சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், நீதிமன்றம், சாரதாநிகேதன் கல்லூரி, தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில், ராயனூர் போர் நினைவுத் தூண் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியைகள் தீ.கீதா, சு.சுபத்ரா மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai