Enable Javscript for better performance
கிரேன் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குமரன் கார்டன் பகுதியில் வியாழக்கிழமை இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரம் சென்றபோது, பின்னால் திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த புகழேந்தி ஓட்டி வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    மணவாடி கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் வெள்ளியணை போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து புகழேந்தியைக் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai